அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இயக்குனர் சுராஜ் தலைநகரம், மருதமலை, படிக்காதவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வடிவேலு நடித்த ‛நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு சுராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய சகலகலா வல்லவன் திரைப்படம் ஏன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று நினைக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அந்த படத்தின் கதாநாயகன் தேர்வே தவறாக அமைந்தது. முதலில் நானும், தனுஷூம் அந்த கதையை பேசினோம். அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களால் தனுஷ் நடிக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஜெயம் ரவி வைத்தது என் தவறான முடிவு. அவருக்கு அந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார்.